000 | : | nam a22 7a 4500 |
008 | : | 170508b ii 000 0 tam d |
245 | : | _ _ |a ஆயர் குழந்தைகள் |
300 | : | _ _ |a புராணச் சிற்பம் |
340 | : | _ _ |a கருங்கல் |
500 | : | _ _ |a மாமல்லபுரத்தில் உள்ள கிருஷ்ண மண்டபத்தில் அமைந்துள்ள கோவர்த்தனன் புடைப்புச் சிற்பத் தொகுதியில் உள்ள ஆயர் குடும்பத்தினரும் குழந்தைகளும் |
510 | : | _ _ |a
|
520 | : | _ _ |a ஆயர் குடும்பம் ஒன்று தன் குழந்தைகளுடன் மழைக்காக மலையின் அடியில் வந்து நின்றுள்ளது. இந்த ஆயர் இணையர்களுக்கு இரு குழந்தைகள் போலும். இரண்டும் ஆண் குழந்தைகள் போலத் தெரிகிறது. வயதில் பெரியவனை தாய் தன் இடது கையால் பிடித்துள்ளாள். சிறு குழந்தையோ தந்தையின் தோளில் அமர்ந்து தலையைப் பற்றியுள்ளது. இக்குடும்பத்தின் தலைவியான குழந்தைகளின் தாய் தலையில் சோற்றுப்பானை மற்றும் தயிர்ப் பானை, மற்றும் சிறு பானை ஒன்றை மூடியுடன் ஒன்றின் மேல் ஒன்றாக அடுக்கி சுமந்தபடி நின்றுள்ளாள். நேர் வகிடு எடுத்து, தமிழம் கொண்டையை தலையலங்காரமாகக் கொண்டுள்ள ஆய்ச்சி கழுத்தில் ஆரம் ஒன்று அணிந்துள்ளாள். முன் கையில் ஒற்றை வளையை அணிந்துள்ளாள். அவளின் எளிய கோலம் அவளது அழகை மெருகூட்டிக் காட்டுகிறது. அவள் கையில் பிடித்திருக்கும் சிறுவனோ கழுத்தில் அணி ஒன்றை அணிந்துள்ளான். தலையில் அளகசூடகம் தலையலங்காரம் விளங்குகின்றது. இடையில் இடைக்கட்டுடன் கூடிய அரைகாற்சட்டை அணிந்துள்ளான். சிறுமி ஒருத்தியும் இத்தொகுதியில காட்டப்பட்டுள்ளாள். அவளின் கையை அவள் அன்னை பிடித்துள்ளாள். சிறுமிக்கு தலையில் அளகசூடக தலையலங்காரம் விளங்குகின்றது. செவி மற்றும் கழுத்தில் அணிந்துகள் பூண்டுள்ளாள். நளினத்துடன் நிற்கிறாள். |
653 | : | _ _ |a ஆயர் குடும்பம், ஆயர் குழந்தைகள், முல்லைத் திணை வாழ்க்கை, கிருஷ்ண மண்டபம், கோவர்த்தனன், கிரிதரன், கோவர்த்தனதாரி, ஆயர் வாழ்க்கை, ஆயர்பாடி, இடையர், இடைச்சியர், ஆயர், ஆநிரை, மாமல்லை, மாமல்லை தலைசிறந்த படைப்பு, மாமல்லபுரம், மாமல்லபுரம் சிற்பங்கள், பல்லவர் சிற்பங்கள், பஞ்சபாண்டவ ரதங்கள், பல்லவர் கால குடைவரைகள், தொண்டை மண்டலம், காஞ்சிபுரம் |
700 | : | _ _ |a காந்திராஜன் க.த. |
752 | : | _ _ |a மாமல்லபுரம் |b கருவறை விமானம் மேற்குபுற தேவகோட்டம் |c மாமல்லபுரம் |d காஞ்சிபுரம் |f திருக்கழுக்குன்றம் |
905 | : | _ _ |a கி.பி.7-ஆம் நூற்றாண்டு/பல்லவர் |
914 | : | _ _ |a 12.626927 |
915 | : | _ _ |a 80.1927109 |
995 | : | _ _ |a TVA_SCL_000472 |
barcode | : | TVA_SCL_000472 |
book category | : | கற்சிற்பங்கள் |
Primary File | : |